மெத்தாம்பெட்டமின் விற்பனை செய்த ஐடி ஊழியர்கள் நடன கலைஞர் கைது

1 week ago 2

சென்னை: ராயப்பேட்டை பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவில் மெத்தாம்பெட்டமின் நடமாட்டம் இருப்பதாக போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேரை தனிப்படையினர் பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பிக்க முயன்றனர். உடனே தனிப்படையினர் 3 பேரையும் பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 10 சிரஞ்சிகள், 4.5 கிராம் மெத்தாம்பெட்டமின் போதைப் பொருள் இருந்தது. விசாரணையில், அசோக் நகரை சேர்ந்த ரிதிஷ்குமார் (26), ராயப்பேட்டையை சேர்ந்த சக்தி வாசுதேவன் (34) மற்றும் வினோஷ் ஆனந்த் (32) என தெரியவந்தது.

இதில் மூவரும் பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருவது தெரியவந்தது. வினேஷ் நடன கலைஞர் என்பதும், இவர்கள் மெத்தாம்பெட்டமின் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கிரைண்டர் செயலி மூலம் நுங்கம்பாக்கம் ஷெனாய் சாலையில் வசித்து வரும் அமித் என்பவரிடம் இருந்து போதைப் பொருளை பெற்று வந்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நடன கலைஞர் உட்பட 3 பொறியாளர்களையும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் 3 பேரையும் கைது செய்து தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளி அமித் என்பவரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 சிரஞ்சிகள், 4.5 கிராம் மெத்தாம்பெட்டமின் மற்றும் 3 செல்போன்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

The post மெத்தாம்பெட்டமின் விற்பனை செய்த ஐடி ஊழியர்கள் நடன கலைஞர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article