பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட மெதுர் ஊராட்சியில் உள்ள சுமார் 50 இடங்களில் இரவு நேரங்களில் மின்விளக்கு இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கை ஏற்று ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் நீண்ட கால நண்பர்கள் உதவியுடன் திருப்பூர் கனரா வங்கி மேலாளர் சிரஞ்சீவியை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்தார். அக்கோரிக்கையை ஏற்று கனரா வங்கி சமூக வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, ஊராட்சியில் அடங்கிய மெதுர், அச்சரப்பள்ளம் காலனி மற்றும் பள்ளி, கோயில், பேருந்து நிலையம் என முக்கிய சாலைகளில் 5 உயர் கோபுர மின்விளக்கு மற்றும் 45 இடங்களில் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் உஷா சசிகுமார், ஊராட்சி செயலர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முனிவேல், ரமேஷ், வங்கி மேலாளர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மின்விளக்கு அமைத்துக் கொடுத்த கனரா வங்கி மேலாளருக்கும், ஊராட்சி மன்றத்திற்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
The post மெதூர் ஊராட்சியில் புதிய சோலார் விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.