மெட்ரோ பணிகள் நிறைவு: சாந்தோம், லூப் சாலைகளில் நாளை முதல் வாகனங்கள் செல்ல அனுமதி

4 hours ago 2

சென்னை,

சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணிகள் நிறைவு பெற்றதை அடுத்து நாளை முதல் சாந்தோம் மற்றும் லூப் சாலைகளில் இரு வழிகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த நேரங்களான ( காலை 7.30 மணி முதல் 11 மணி மற்றும் மாலை 5.00 மணி முதல் 8.30 மணி வரை ) மட்டும் ஒரு வழிகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கார்ணீஸ்வரர் கோவில் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரெயில் பணி காரணமாக, ஒருவழிப் போக்குவரத்து முறையானது (லூப் சாலை வழியாக) கடந்த ஆண்டு நடைமுறை படுத்தப்பட்டது. தற்போது சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மெட்ரோ பணி முடிந்த நிலையில், நெரிசல் இல்லாத நேரங்களில் நாளை (09.05.2025) முதல் சாந்தோம் நெடுஞ்சாலை, லூப் சாலையில் மீண்டும் இருவழிப் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நெரிசல் மிகுந்த நேரங்களில் (காலை 07.30 மணி முதல் 11.00 மணி வரை மற்றும் மாலை 17.00 மணி முதல் 20.30 மணி வரை) அதிக போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ஒருவழிப் போக்குவரத்து வழக்கம் போல் தொடரும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article