மெடிசேஃப் செயலி !

2 weeks ago 3

உடல் நலத்தை ஆரோக்கியமாகப் பேண நினைப்பவர்களுக்கு நண்பனாக உதவுகிறது மெடிசேஃப் (Medi safe) என்கிற மருத்துவ செயலி.உங்கள் குடும்ப உறுப்பினர் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் காலை, மதியம், இரவு வேளைகளில் அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகளைச் சரியான நேரத்துக்கு இச்செயலி நினைவூட்டுகிறது.இச்செயலியில் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகள் குறித்த தகவல்களும், அம்மருந்துகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்களும் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் மருந்துகள் அருகிலுள்ள எந்த மருந்தகத்தில் கிடைக்கும் என்பது போன்ற கூடுதல் தகவல்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அவை உடல் நலத்திற்கு நல்லதா என்பதையும் இச்செயலி மூலம் அறியலாம்.

 

The post மெடிசேஃப் செயலி ! appeared first on Dinakaran.

Read Entire Article