மெக்சிகோ நிதி மந்திரியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

3 months ago 22

மெக்சிகோ சிட்டி,

அரசு முறை பயணமாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மெக்சிகோ சென்றுள்ளார். அவர் மெக்சிகோவில் இந்தியர்களை சந்தித்தார். மேலும், மெக்சிகோ சிட்டியில் நடைபெற்ற இந்தியா - மெக்சிகோ இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.

இந்நிலையில், மெக்சிகோ நிதி மந்திரி ரமிர்ஸ் டி லா ஒ-வை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவது, டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பான தொழில்நுட்ப பகிர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு நிதி மந்திரிகளும் ஆலோசனை நடத்தினர்.

மெக்சிகோ பயணத்தை முடித்துக்கொண்டு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article