அரியலூர் மே 16: அரியலூர் அருகே விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தவரின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது;
அரியலூர் மாவட்டம் காவனூர் ஊராட்சி பொன்பரப்பியான் தெருவில் வசித்து வந்த சின்னப்பா என்பவரின் மகன் பாக்கியராஜ் (41). சாலை விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மூளைச்சாவு ஏற்பட்டு இறந்துவிட்டார். மேற்படி, அந்த நபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, செய்ததற்கு அரசு சார்பில் மரியாதை செய்யும் விதமாக, காவனூர் கிராமத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள பாக்கியராஜின் உடலுக்கு அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ் மரியாதை செலுத்தினார். அப்போது, அரசு அலுவலர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தவர் உடல் உறுப்பு தானம்: மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு மரியாதை appeared first on Dinakaran.