மூலனூர் விற்பனை கூடத்தில் ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

2 months ago 12

 

தாராபுரம், நவ.22: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பு வாரத்திற்கான பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது, இந்த ஏலத்தில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 35 விவசாயிகள் 426 மூட்டைகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், பருத்தி மறைமுக ஏலத்தில் எடுத்து கொள்முதல் செய்ய திண்டுக்கல் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், மாவட்டங்களைச் சேர்ந்த 4 வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.

ஏலத்தில் ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்ச விலையாக ரூ.8029க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.6500க்கும், சராசரி விலையாக ரூ.7500க்கும் விற்பனையானது. அதன்படி, ரூ.10 லட்சத்து 85 ஆயிரத்து 680க்கு ஏலம் போனது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முதுநிலை செயலாளர் (பொறுப்பு) தர்மராஜ், விற்பனைக்குழு கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

The post மூலனூர் விற்பனை கூடத்தில் ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Read Entire Article