மூலதன செலவை குறைக்கவில்லை ஒன்றிய அரசு விளக்கம்

1 day ago 5

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது, “2024-25ம் நிதியாண்டில் மூலதன செலவு ரூ.11.11 லட்சம் கோடியாக இருந்தது. அது 2025-26 நிதியாண்டில் ரூ.11.21 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எனவே மூலதன செலவு குறைக்கப்படவில்லை.

2020-21ம் நிதியாண்டில் மாநிலங்களுக்கு மூலதன செலவினங்களுக்காக வட்டியில்லா 50 ஆண்டுகால சிறப்பு உதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் மாநிலங்களுக்கான கடன்களை விடுவிப்பது அதிகரித்துள்ளது. அதன்படி 2024-25 நிதியாண்டில் மார்ச் 26ம் தேதி வரை சுமார் ரூ.1,46,362 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது” என விளக்கம் அளித்தார்.

The post மூலதன செலவை குறைக்கவில்லை ஒன்றிய அரசு விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article