கோபி,அக்.19: கோபி அருகே உள்ள கொடிவேரி அணை 3 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700ஆண்டுக்கு முன் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை காரணமாக கொடிவேரி அணை பகுதியில் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையில் குளிக்கும் பகுதியில் பாதுகாப்பு கம்பிகளை தாண்டி தண்ணீர் வெளியேறியதால், அணை மூடப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறையவே, கொடிவேரி அணை நேற்று திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அணையில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.மூன்று நாட்களாக அணை மூடப்பட்டதால் நேற்று குறைவான சுற்றுலா பயணிகளே கொடிவேரி அணைக்கு வருகை தந்தனர்.
The post மூன்று நாட்களுக்கு பிறகு கொடிவேரி அணை திறப்பு appeared first on Dinakaran.