
மும்பை,
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் அமீர் கான். 'யாதோன் கி பாரத்' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த 'லகான், கஜினி, 3 இடியட்ஸ், தூம் 3, தங்கல்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது இவர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கி வரும் சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடித்து வருகிறார். மேலும், மறைந்த நடிகரும், இசையமைப்பாளருமான கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க உள்ளார். மறுபுறம் தனது நீண்ட நாள் கனவான மகாபாரதத்தை படமாக எடுக்க உள்ளார். தற்போது அதற்கான குழு அமைத்து முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கிடையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர் கான் என பாலிவுட்டின் மூன்று கான்களும் இணைந்து நடிப்பீர்களா ?' என கேள்வி எழுப்பினார். அதற்கு அமீர் கான் விளக்கமளித்துள்ளார். அதாவது, "சரியான கதை அமைந்தால் நாங்கள் ஏன் இணைந்து நடிக்க கூடாது?'' எனக் கூறினார். மேலும் எனக்கு தெரிந்து சல்மான் கானும் ஷாருக்கானும் இணைந்து நடிக்க ரெடியாகத் தான் இருக்கிறார்கள். நாங்கள் மூன்று பேரும் இணைந்து நடிப்பதை நான் விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.