மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கை நிவேதா தாக்கல் செய்த மனுவில், "2024-25-ம் கல்வியாண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை குறித்த விளக்க குறிப்பேட்டில், மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவாக வகைப்படுத்தவில்லை. இது உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கு முரணானது. எனவே, கால்நடை மருத்துவப் படிப்பில் எனக்கு இடம் வழங்க வேண்டும்" என கோரியிருந்தார்.