மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் மறைவுக்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

4 hours ago 2

சென்னை,

மூத்த தமிழறிஞர் வா.மு. சேதுராமன் மறைவுக்கு பா.ம.க. செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், மூத்த தமிழறிஞரும், பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனருமான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் முதுமை காரணமாக சென்னையில் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

அன்னை தமிழுக்கு பணி செய்வதையே வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த அவர், மருத்துவர் அய்யா அவர்கள் மேற்கொண்ட தமிழ் பாதுகாப்பு பணிகளுக்கு துணையாக இருந்தவர். இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட ஏராளமான தமிழ் காக்கும் போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். ஏராளமான நூல்களை எழுதிய அவர், பல விருதுகளையும் வென்றுள்ளார்.

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

Read Entire Article