மூணாறில் ஊராட்சி உறுப்பினர் தகுதி நீக்கம்

2 weeks ago 4

மூணாறு, நவ.6: மூணாறு ஊராட்சியில் கட்சி தாவிய உறுப்பினரை கட்சி தாவல் தடை சட்டத்தின்படி தேர்தல் கமிஷன் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. கேரளா மாநிலம் மூணாறு ஊராட்சியில் 8ம் வார்டு உறுப்பினர் தங்கமுடி என்பவர் கடந்த உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து இவர் உள்கட்சியினரிடையே ஏற்பட்ட பூசல் காரணமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் இடதுசாரி கட்சி உறுப்பினர்களின் இது தொடர்பான புகாரை தொடர்ந்து அவர் கட்சி தாவல் தடுப்பு சட்டப் படி உறுப்பினர் பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்தும், ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து மூணாறு ஊராட்சியில் 21 வார்டுகளில் காங்கிரஸ் 12, இடது சாரி கூட்டணி 8 உறுப்பினர்கள் உள்ளனர்.

The post மூணாறில் ஊராட்சி உறுப்பினர் தகுதி நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article