பிஜ்னோர்: உபி மாநிலம் அம்ரோஹா தொகுதி சமாஜ்வாடி எம்எல்ஏ மெகபூப் அலி நேற்றுமுன்தினம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அப்போது, மெகபூப் அலி பேசுகையில், ‘‘ இந்தியாவை 800 ஆண்டுகள் ஆண்ட முகலாயர்கள் இப்போது இல்லை. பாஜவும் நீண்ட காலம் ஆட்சியில் நீடிக்குமா?. உபியில் முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்களவை தேர்தலில் அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். 2027ம் ஆண்டு பேரவை தேர்தலில்,முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.பாஜ தோற்கடிக்கப்பட்டு, சமாஜ்வாடி ஆட்சியை பிடிக்கும்’’ என்றார். அவர் பேசிய பேச்சுக்கள் அடங்கிய வீடியோ வைரலாகியுள்ளது.
பாஜ பொது செயலாளர் சுப்ரத் பதக் கூறுகையில்,‘‘ஒரு குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தும் விதமாக இந்துக்களை பிரிக்கும் வகையில் அகிலேஷ் யாதவ் செயல்படுகிறார். மெகபூப் அலியின் பேச்சுக்கு சமாஜ்வாடி பதில் அளிக்க வேண்டும்’’ என்றார். சமாஜ்வாடி செய்தி தொடர்பாளர் சுனில் சஜன்,‘‘மெகபூப் அலியின் இந்த கருத்தை சமாஜ்வாடி ஆதரிக்கவில்லை. ஆனால் நாட்டில் பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது.பாஜவின் ஊழல்களும் அதிகரித்துள்ளன. மாநிலங்கள் தீப்பற்றி எரிகின்றன.பிரதமர் மோடி அமைதியாக உள்ளார்’’ என்றார்.
The post முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது; 2027ல் உபி பாஜ அரசு அகற்றப்படும்: சமாஜ்வாடி எம்எல்ஏ பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.