முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்

2 hours ago 2

சென்னை: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப்படி பல்லாண்டுகளாக சிறையில் வாடும் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்கிற இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று காலை மாபெரும் பேரணி நடந்தது. கட்சி தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எஸ்.சபீக் அஹம்மது, முகம்மது ரஷீத், பஷீர் சுல்தான், அஸ்கர் அலி, ரவிச்சந்திரன், சென்னை வடக்கு மண்டல செயலாளர் முகமது இஸ்மாயில், சென்னை மண்டல மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, சலீம் ஜாஃபர், பூட்டோ மைதீன், சீனி முகம்மது, அப்துல் ரசாக், முகமது பிலால், செய்யது அஹமது, வழ.நவ்ஃபில், ஆர்.எம்.கே.மாலிக், ஜூபைர் அலி, ஜாஃபர் ஷெரிப் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வரவேற்றார்.

மாநில செயலாளர் ரத்தினம், பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், அகமது நவவி, அபுபக்கர் சித்தீக், நஜ்மா பேகம் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். பேரணியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் தேசிய விடுதலை இயக்கம் பொதுச்செயலாளர் தியாகு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், தவத்திரு திருவடிக்குடில் அடிகளார், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் எம்.ராஜேஸ்வரி பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினர். பேரணியில், பெண்கள், குழந்தைகள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு கோஷமிட்டனர். மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா தொகுப்புரை வழங்கினார். மாநில செயலாளர் ஏ.கே.கரீம் நன்றி கூறினார்.

The post முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீட்டை வலியுறுத்தி சென்னையில் எஸ்டிபிஐ கட்சி பேரணி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் appeared first on Dinakaran.

Read Entire Article