முள்ளங்கி கீரை மசாலா

3 months ago 27

தேவையான பொருட்கள் :

கீரையுடன் இருக்கும் முள்ளங்கி பெரிதாக – 2;
உப்புத் தண்ணிரில் வேக வைத்து எடுத்த முள்ளங்கிக் கீரை – 1 கப்;
பெருங் காயம்-1/4 ஸ்பூன்;
கடுகு – 1 ஸ்பூன்;
ஜீரகம் – 1/4 ஸ்பூன்;
மிள காய்த் தூள் – 1/2 ஸ்பூன்;
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்;
சர்கக்ரை – 1/2 ஸ்பூன்;
ஆம்சூர் தூள் – 1 ஸ்பூன் அல்லது
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்
கரம் மசாலா – 1
எண்ணெய், உப்பு – தேவைக் கேற்ப;

செய்முறை

முள்ளங் கியை சின்ன துண்டு களாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போடவும். முள்ளங்கிக் கீரையையும் நறுக்கி அதில் சேர்க்கவும். உப்பு சேர்த்துப் பிசறி, சிறிது நேரம் வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங் காயம், சீரகம் தாளிக்கவும். தயாராக வைத்துள்ள முள்ளங்கி மற்றும் அத்ன் கீரைத் துண்டுகளை அதில் சேர்க்கவும். நன்கு கலந்து வேக வைத்துள்ள முள்ளங்கிக் கீரையையும் சேர்த்துக் கிளறவும். மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கொஞ் சமாக தண்ணீர் விட்டு வேக விடவும். 4 நிமிடங்கள் வெந்ததும், சர்க்கரை மற்றும் ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கவும். மூள்ளங்கி நன்கு வெந்ததும் எடுத்துப் பறிமாறவும்.

 

The post முள்ளங்கி கீரை மசாலா appeared first on Dinakaran.

Read Entire Article