குமுளி: தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லை பெரியாறு அணையை மத்திய நீர்வளத் துறை ஆணையத் தலைவர் நேற்று ஆய்வு செய்தார். தமிழக அரசின் அனுமதியின்றி அடிக்கடி இதுபோன்ற ஆய்வுகள் நடைபெற்று வருவதாக விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முல்லை பெரியாறு அணை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதற்காக ஆணையத் தலைவர் அனில்ஜெயின் தலைமையில் 7 பேர் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டது. கடந்த மார்ச் 22-ம் தேதி இக்குழுவினர் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். பின்னர், தேக்கடியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.