திருச்சி, மார்ச் 29: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம், முருங்கப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டுவிழாவில் மாணவர்களின் கண்டுவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னாள் மாணவர் என்.நேரு தலைமையில் விழா நடைபெற்றது. தலைமையாசிரியர் சேசுமதி வரவேற்றார். வட்டாரக் கல்வி அலுவலர் கா.மருதநாயகம், எஸ்.ஸ்டாலின் ராஜசேகர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் கு.மீனா, எஸ்எம்சி ஒன்றியக் கருத்தாளர் ஜான்சிராணி, சிறப்பு பயிற்றுநர் இந்துமதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வாழ்த்து, அறிவுரை வழங்கினர்.
முதல் வகுப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட 5 குழந்தை, மூன்றாம் வகுப்பு 1 குழந்தைக்கும் பதக்கம், கிரீடம் சூட்டி பரிசு பொருட்கள், சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. முன்னாள் தலைமையாசிரியை S.ராஜேஸ்வரி (ஓய்வு) விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். முன்னாள் ஊராட்சி மன்ற து.தலைவர் T.ஆதிசிவன் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவர் S. ராஜேந்திரன், R. சுப்புலெட்சுமி மகேஷ்வரி, P.கல்யாணி கலந்து கொண்டனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி லலிதா-காமராஜ் வருகை புரிந்தார். விழா நிகழ்ச்சிகளை இடைநிலை ஆசிரியை சி.ஜெயர்தி தொகுத்து வழங்கினார்.
The post முருங்கப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.