முருக பக்தர்கள் மாநாடு முழுக்க வன்முறை தூண்டுவதாகவும் வெறுப்பை உமிழ்வதாகவும் அமைந்தது: வன்னி அரசு காட்டம்!

1 week ago 3

சென்னை: முருக பக்தர்கள் மாநாடு முழுக்க வன்முறை தூண்டுவதாகவும் வெறுப்பை உமிழ்வதாகவும் அமைந்தது என விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுசெயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

முருக பக்தர்கள் மாநாடு எனும் பெயரில் இந்து முன்னணி பின்னணியில் பாஜக நடத்திய மாநாடு முழுக்க வன்முறையை தூண்டும் விதமாகவும் வெறுப்பை உமிழ்வதாகவே அமைந்தது. குறிப்பாக, இந்து அறநிலையத்துறையை விட்டு அரசு வெளியேற வேண்டும் எனும் தீர்மானம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ஓபிசி மக்களுக்கும் எதிரானதாகும்.

பார்ப்பனர் கட்டுப்பாட்டிலிருந்த கோவில்களை மீட்டு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது அரசு. இதன் மூலம் பார்ப்பனரல்லாத இந்துக்களும் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு தரப்பட்டது. இது சமூக நீதி அடிப்படையில் அமைந்தது. இதை பொறுக்க முடியாமல் தான் நீண்ட காலமாகவே இந்த கோரிக்கையை சனாதனக்கும்பல் முன் வைக்கிறது. இப்போது அதையே ஒரு தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர்.

மீண்டும் கோவில்கள் பார்ப்பனர் கட்டுப்பாட்டுக்குள் போனால், பார்ப்பனரல்லாத இந்துக்களின் நிலை என்னவாக இருக்கும்? நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதே போல, தேர்தலில் இந்து வாக்கு வங்கியை நிரூபிக்க இந்துக்கள் ஒற்றுமையை இருக்க வேண்டும் எனும் தீர்மானம் அரசியலமைப்புச்சட்டத்துக்கே எதிரானது. வாக்குகளுக்காக இந்து- இந்து அல்லாதவர் என எப்படி பாகுபடுத்தி காட்ட முடியும்?.

இது இந்து பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்கும் தீர்மானமாகும். அரசியல் பேசக்கூடாது என நீதிமன்றம் வழிகாட்டினாலும் அரசியலையும் தாண்டி வன்மத்தையே கட்டமைத்துள்ளது இந்த மாநாடு. ஓபிசி இந்துக்களும் தலித்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post முருக பக்தர்கள் மாநாடு முழுக்க வன்முறை தூண்டுவதாகவும் வெறுப்பை உமிழ்வதாகவும் அமைந்தது: வன்னி அரசு காட்டம்! appeared first on Dinakaran.

Read Entire Article