'முரா' படத்தின் டிரெய்லரை வெளியிடும் விஜய்சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யா

2 months ago 14

சென்னை,

முஹம்மது முஸ்தபா இயக்கிய மலையாளப் படம் 'முரா'. இப்படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் கனி குஸ்ருதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எச்ஆர் பிக்சர்ஸின் கீழ் ரியா ஷிபு தயாரித்த இப்படத்தின் திரைக்கதையை சுரேஷ் பாபு எழுதியுள்ளார். மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திருவனந்தபுரத்தை மையமாக வைத்து ஆக்ஷன் திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. முராவில் மாலா பார்வதி, கனி குஸ்ருதி, கண்ணன் நாயர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது. இந்த டிரெய்லரை விஜய் சேதுபதி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் வெளியிட உள்ளனர். 

Kollywood Titans Unite! @VijaySethuOffl & @iam_SJSuryah bring the heat in Mura! Get ready for an epic trailer launch tomorrow at 6 PM! #MURA#surajvenjaramoodu @hridhuharoon Directed by #musthafaactor Produced by HR Pictures @riyashibu_ Music by #christyjoby #MURApic.twitter.com/wgihk3osoJ

— HR Pictures (@hr_pictures) October 27, 2024
Read Entire Article