சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளனர். “விஜயகாந்த் உடன் நல்ல நட்புடன் பழகியவர் முரசொலி செல்வம். முரசொலி செல்வம் மறைவு திமுகவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“என்னுடைய இனிய நண்பர் முரசொலி செல்வம் மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. பத்திரிகை ஆசிரியராக அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக திராவிடக் கருத்தியலைச் சுமந்தவர். திரைப்படத் துறையிலும் பங்களிப்பாற்றியவர். எல்லாவற்றுக்கும் மேலாக நட்புக்கு மரியாதை அளிக்கிற நல்ல மனிதர். முரசொலி செல்வம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
The post முரசொலி செல்வம் மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் appeared first on Dinakaran.