முரசொலி செல்வம் மறைவு: மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

3 months ago 20

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நேற்று முன்தினம் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முரசொலி செல்வம் மறைவையொட்டி அவரது மனைவி செல்வி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மராட்டிய கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோபாலபுர இல்லத்தில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் தமிழக பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் முரசொலி செல்வம் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

#JUSTIN || முரசொலி செல்வம் மறைவு - மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் ஆறுதல்

முரசொலி செல்வத்தின் மனைவி செல்வி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஆறுதல்

பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் நேரில் ஆறுதல்

முரசொலி செல்வத்தின்… pic.twitter.com/r6hcUNSx5x

— Thanthi TV (@ThanthiTV) October 13, 2024

Read Entire Article