''மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுவரையறையில் புதுச்சேரி அரசின் நிலைப்பாடு என்ன?'' - எம்.பி. வைத்திலிங்கம் கேள்வி

1 week ago 2

புதுச்சேரி: “மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை ஆகியவற்றில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை முதல்வர் ரங்கசாமி தெளிவுப்படுத்த வேண்டும். ரங்கசாமி ஆதரிக்கும் விஜய் கட்சிகூட இவற்றை எதிர்க்கும் நிலையில் அவர் மவுனம் காக்கலாமா?” என்று காங்கிரஸ் மாநிலத் தலைவரும் எம்.பியுமான வைத்திலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. இன்று (மார்ச் 5) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை விகிதாச்சார அடிப்படையில் மேற்கொள்ள இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Read Entire Article