மும்பை: டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மின்சார கார் என்பது பேட்டரியில் இயங்கும் வாகனமாகும். இது பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருட்களுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கான ஒரு வழியாகும். இந்தியாவில், மின்சார கார் சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. இதை தொடர்ந்து டெஸ்லா, வின்ஃபாஸ்ட், கியா நிறுவன மின்சார கார்களின் விலை உள்ளிட்ட விவரங்கள் (15.07.2025)இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் Y வகை மின்சார கார் இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லா நிறுவன ஷோரூமில் ஒய் மாடல் மின்சார கார் அறிமுகப்படுத்தப்பட்டது.Y மாடல் மின்சார காரின் விலை ரூ.60 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘Model Y rear’ காரின் விலை ரூ.60 லட்சம்; ‘Model Y long range’ காரின் விலை ரூ.68 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. மேலும், வின்ஃபாஸ்ட் மின்சார காரின் முதல் 2 மாடல்களுக்கான (VF6, VF7) முன்பதிவு இன்று (ஜூலை 15) தொடங்குகிறது. விரைவில், முழு வீச்சில் உற்பத்தி தொடங்க உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் வாடிக்கையாளர்களுக்கு VF6 மற்றும் VF7 மாடல் கார்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வின்பாஸ்ட் VF 6 கார் விலை ரூ.25 லட்சம், VF7 மாடல் மின்சார கார் விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கியா நிறுவன கேரன்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் விலை ரூ.19 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்குள் நிர்ணயிக்க வாய்ப்பு உள்ளது.
The post மும்பையில் திறக்கப்பட்ட டெஸ்லா நிறுவன ஷோரூம்: Y வகை மின்சார கார் அறிமுகம் appeared first on Dinakaran.