மும்பையில் உள்ள ஒரு வீட்டில் ரூ. 6 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

3 hours ago 2

தானே,

மும்பையின் கோவண்டி பகுதியில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சல்மான் என்பவரின் வீட்டில் நேற்று இரவு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள பல்வேறு போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதைத் தொடர்ந்து சல்மான் ஷேக் என அடையாளம் காணப்பட்ட 23 வயது குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த சோதனையில் ரூ.6 கோடி மதிப்புள்ள மூன்று கிலோகிராம் எம்.டி. போதைப்பொருள், ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள 12 கிலோகிராம் கஞ்சா, ரூ.18,000 மதிப்புள்ள 36 பாட்டில்கள் கோடீன் பாஸ்பேட் மற்றும் ரூ.1.30 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.6,03,88,000 மதிப்புள்ள பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட ஷேக் போதைப்பொருட்களை எங்கிருந்து பெற்றார் என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர்.

Read Entire Article