மும்பை ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்: 10 பேர் காயம்

6 months ago 27

மும்பை,

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாட்டின் பல்வேறு ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டத்தை சமாளிக்க கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில் தீபாவளியையொட்டி மராட்டிய மாநிலம் மும்பையின் பாந்திரா ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2.45 மணியளவில் உத்தரபிரதேசத்தின் கோரக்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.

ரெயில் பாந்திரா ரெயில் நிலையத்திற்கு வந்தபோது அதில் ஏற ஆயிரக்கணக்கான பயணிகள் முயற்சித்தனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர். விரைந்து வந்த ரெயில்வே போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது

Read Entire Article