மும்பை தெருக்களில் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பட்லர்

15 hours ago 3

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது. குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், குஜராத் வீரர் ஜோஸ் பட்லர் மும்பையில் தெருக்களில் சிறுவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 



Jos Buttler playing cricket in Mumbai streets [: Jos Buttler Instagram] pic.twitter.com/UEc3yO5i26

— Johns. (@CricCrazyJohns) May 7, 2025


Read Entire Article