
டெல்லி,
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தி இந்தியா கொண்டு வரப்பட்டார்.
பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர் டெல்லி சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 18 நாள் என்.ஐ.ஏ. காவல் விதித்தது. இதையடுத்து, டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. தலைமை அலுவலகத்தில் தஹாவூர் ராணாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், ராணவின் 18 நாட்கள் என்.ஐ.ஏ. காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, மும்பை தாக்குதல் குற்றவாளி ராணா இன்று டெல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, ராணாவின் என்.ஐ.ஏ. காவலை மேலும் 12 நாட்கள் நீட்டிக்க வேண்டுமென என்.ஐ.ஏ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி விசாரித்தார். 12 நாட்கள் காவலை நீட்டிக்க வேண்டுமன என்.ஐ.ஏ. தாக்கல் செய்த மனு மீது இன்றே உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.