பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 7 பேர் பலி

3 hours ago 4

லாகூர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் தெற்கு வாரிஸ்தான் மாவட்டம் வனா கிராமத்தில் அமைதி பேச்சுவார்த்தை குழு அலுவலகம் (Peace Commitee office) உள்ளது.

கிராமங்களுக்கு இடையேயான பிரச்சினை, உள்ளூர் பிரச்சினை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த அலுவலகத்தில் ஆலோசிக்கப்படுவது வழக்கம். இந்த கூட்டத்தில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொள்வர்.

இந்நிலையில், இந்த அலுவலகத்தில் இன்று காலை 20க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அப்போது திடீரென அலுவலகத்தில் குண்டு வெடித்தது. இதில், 16 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர். எஞ்சிய 9 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Read Entire Article