மும்பை - டெல்லி ஆட்டத்தின்போது மைதானத்தில் மோதிக்கொண்ட ரசிகர்கள்

1 day ago 4

டெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லி  மைதானத்தில் இந்த ஆட்டத்தில் டெல்லியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஆட்டத்தின்போது மைதானத்தில் டெல்லி - மும்பை ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், மைதானத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் மற்றும் மைதான பாதுகாப்பு ஊழியர்கள் ரசிகர்களை சமாதானபடுத்தி நிலைமையை கட்டுக்கொள் கொண்டு வந்தனர்.

ரசிகர்கள் இடையேயான மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Entire Article