மும்பை அணிக்காக... சச்சினின் மாபெரும் சாதனையை முறியடித்து வரலாறு படைத்த சூர்யகுமார் யாதவ்

16 hours ago 2

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது.

குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திதிரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை வீரரான சூர்யகுமார் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் நடப்பு தொடரில் அவர் இதுவரை 510* ரன்கள் குவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தொடரில் 500+ ரன்களை கடந்ததன் மூலம் ஐ.பி.எல். தொடரில் மும்பை அணிக்காக சச்சினின் மாபெரும் சாதனையை முறியடித்து சூர்யகுமார் யாதவ் வரலாறு படைத்துள்ளார். அதாவது, ஐ.பி.எல். வரலாற்றில் மும்பை அணிகாக அதிக முறை 500+ ரன்கள் (சீசன்கள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற சச்சினின் (2 முறை) சாதனையை சூர்யகுமார் யாதவ் (3* முறை) முறியடித்து சாதனை படைத்துள்ளார்.

ஐ.பி.எல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக முறை 500+ (ரன்) சீசன்கள் அடித்த வீரர்கள் பட்டியல்:

சூர்யகுமார் யாதவ் - 3 முறை (2018, 2023, 2025)

சச்சின் டெண்டுல்கர் - 2 முறை (2010, 2011)

டிகாக் - 2 முறை (2019, 2020)

Read Entire Article