
லண்டன்,
இந்தியா, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தி உள்ளது. இது போர்ப்பதற்றத்தை தீவிரமாக்கி உள்ளது. இந்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து இங்கிலாந்து சார்பில் வர்த்தக செயலாளர் ஜோனாதன் ரெனால்ட்ஸ், கூறியிருப்பதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் போர்ச்சூழல் நிலைமை மிகவும் கவலை அளிக்கிறது. பதற்றத்தை குறைப்பதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து ஆதரவு அளிக்கிறது. நாங்கள் இரு நாடுகளுக்கும் நண்பர், கூட்டாளி என்பதே எங்கள் செய்தி. இரு நாடுகளையும் ஆதரிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
இருவரும் பிராந்திய ஸ்திரத்தன்மை, உரையாடல், பதற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார்கள். எதுவானாலும் அதை ஆதரிக்க எங்களால் செய்யக்கூடிய எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.