முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் பரிசுத் திட்டம்: அரசு பேருந்துகளில் பயணத்துக்கு முன்பதிவு தொடர்ந்து அதிகரிப்பு!

2 months ago 12

சென்னை: அரசு பேருந்துகளில் பயணத்துக்கு முன்பதிவு செய்து தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது. அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தேர்தெடுக்கப்படும் மூன்று பயணிகளுக்கு தலா ரூ.10,000-யும், 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000 வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் பயணம் செய்து தேர்வானவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதுபோன்ற திட்டங்களால் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனிடையே நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை அனைத்து நாட்களிலும் முன்பதிவுகளுக்கு சிறப்பு குலுக்கல் நடத்தப்பட உள்ளது. இதில் தேர்தெடுக்கப்படுவோருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம், இரண்டாவது பரிசாக தொலைக்காட்சி பெட்டி, மூன்றாவது பரிசாக குளிர்சாதன பெட்டி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் பரிசுத் திட்டம்: அரசு பேருந்துகளில் பயணத்துக்கு முன்பதிவு தொடர்ந்து அதிகரிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article