நெல்லை : முன்னீர்பள்ளம் ரயில்வே தண்டவாளம் அருகே குடிநீர் குழாயில் பல ஆண்டுகளாக உடைப்பு ஏற்பட்டு குளம்போல் தேங்கி கிடக்கும் தண்ணீரால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் ரயில்வே வழித்தடத்தில் முன்னீர்பள்ளம் – அம்பை சாலையில் மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரயில்வே தண்டவாளத்தை ஓட்டிய பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக காணப்படுகிறது.
இதனால் பல லட்சம் குடிதண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பில் இருந்து வீணாகும் குடி தண்ணீர் அப்பகுதியில் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாவதாகவும், பகல், இரவு நேரங்களில் அப்பகுதி பொதுமக்கள் கொசுத்தொல்லையால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
குளம் போல் தண்ணீர் அங்கேயே தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆகவே குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
The post முன்னீர்பள்ளம் ரயில்வே தண்டவாளம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் குளம்போல் தேங்கிய தண்ணீர் appeared first on Dinakaran.