கடன் பிரச்சனையால் வாலிபர் தற்கொலை

6 hours ago 4

 

சிவகாசி, ஜூலை 7: கடன் பிரச்சனையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.சிவகாசி அருகே ஆனையூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் கருப்பசாமி(27). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இருவருக்கும் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கருப்பசாமி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கருப்பசாமி கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
தவணை பணம் செலுத்த முடியாமல் அவதி அடைந்து வந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கடன் பிரச்சனையால் வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article