தியாகராஜநகர், மே19: 108 ஆம்புலன்ஸ் சேவையில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கு தகுதி உள்ள நபர்கள் தேர்வு வருகிற 21ம் தேதி கீழமுன்னீர்பள்ளம் சமுதாய நலக்கூடத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளர் பணிக்கு பிஎஸ்சி நர்சிங் அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎம்எல்டி (12ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்). அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரியாக இருக்க வேண்டும், (பிஎஸ்சி விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி பையோ டெக்னாலஜி). நேர்முகத்தேர்வு அன்று வயது 19க்கு மேலும் 30க்கு மிகாமலும் இருக்க வேண்டும், ஆண் பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம், உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை, மனிதவள துறையின் நேர்காணல் ஆகிய தேர்வு நடைபெறும், மாத ஊதியம் 16 ஆயிரத்து 990. இதேபோல் ஓட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாத ஊதியம் 16,790, நேர்முகத்தேர்வு அன்று 24 வயதிற்கு மேலும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் தகுதியாக இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தது 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் எடுத்து குறைந்தது 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
The post முன்னீர்பள்ளத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவ உதவியாளர் பணிக்கு ேம 21ம் தேதி நேர்காணல் appeared first on Dinakaran.