முன்னாள் மத்திய மந்திரி கிரிஜா வியாஸ் மறைவு; ராஜஸ்தான் முதல்-மந்திரி இரங்கல்

5 hours ago 4

ஆமதாபாத்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான கிரிஜா வியாஸ், ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 31-ந்தேதி நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்து கொண்டது.

இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் பின்பு, ஆமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், ஒருமாத கால சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 79. அவருடைய இறுதி சடங்கு உதய்ப்பூரில் நாளை நடக்கிறது.

அவருடைய மறைவுக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்து உள்ளார். இதேபோன்று, ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன் லால் சர்மா வெளியிட்ட இரங்கல் செய்தியில், கிரிஜா வியாஸின் வாழ்வு பொது சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மென்மையாக நடந்து கொள்ளும் விதம் கொண்ட அவர், ஒரு பிரபல தலைவராக எப்போதும் அறியப்படுவார். அவருடைய மறைவு மாநில அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அவருடைய ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும் என நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். இந்த துயரை தாங்கி கொள்ள அவருடைய குடும்பத்திற்கு இறைவன் வலிமை தரட்டும் என தெரிவித்து உள்ளார்.

Read Entire Article