முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கு | ஒருவருக்கு ஆயுள்; இருவர் விடுதலை - மதுரை கோர்ட் தீர்ப்பு

3 months ago 13

மதுரை: சென்னையில் நடந்த முன்னாள் மத்திய அமைச்சர் மருமகன் கொலை வழக்கில் கல்பனா என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், கார்த்திக் மற்றும் ஆனந்த் ஆகியோரை விடுதலை செய்தும் மதுரை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையை சேர்ந்த மறைந்த மத்திய முன்னாள் அமைச்சர் தலித் ஏழுமலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ். இவர் சமீபத்தில் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பர். இந்நிலையில் சென்னை ஒட்டேரியில் அடுக்குமாடி குடியுருப்பில் வைத்து கடந்த 2014ல் காமராஜ் படுகொலை செய்பட்டார்.இக்கொலை தொடர்பாக சென்னை கொரட்டூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

Read Entire Article