முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி கடன் பெற விண்ணப்பிக்கலாம்

1 week ago 1

 

அரியலூர், பிப். 1: தமிழ்நாட்டை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கிகடன் உதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு: தமிழ்நாடு முதலமைச்சர் 78-வது சுதந்திர தினத்தன்று (15.8.2024) சுதந்திர தின உரையின் போது முன்னாள் படைவீர் நலனுக்காக அறிவிக்கப்பட்ட “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்களுக்கு தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கிகடன் உதவியும் இத்திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு கடன் தொகையில் 30 சதவித மூலதன மானியமும் மற்றும் 3 விழுக்காடு வட்டி மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற தேவையான பயிற்சிகளும் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் 55 வயதிற்குள்ளும் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் 21 முதல் 55 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற குறைந்தபட்ச கல்வித்தகுதி மற்றும் வருமான வரம்பு ஏதும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர் இத்திட்டத்தின், கீழ் கடனுதவி பெற https://exwel.schemes.com என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டம், தொடர்பாக மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04329 221011 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து கடனுதவி பெற்று பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

The post முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி கடன் பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article