முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் காலமானார் - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

4 months ago 15

கோவை: கோவையைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.செல்வராஜ் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 66.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கே.செல்வராஜ். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆவார். தற்போது திமுகவில் செய்தி தொடர்பு துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி கலாமணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது. இதனிடையே திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு, இரு வீட்டார் கார் மூலம் இன்று கோவைக்கு புறப்பட்டனர்.

Read Entire Article