சென்னை: கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கவும், தமிழகத்தில் அந்நோயை அறவே அகற்றிடவும், HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்கவும் ரூ.36 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் காரப்பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மாநில அளவிலான முதன்மை புற்று நோய் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தரம் உயர்த்தி, 800 படுக்கைகளுடன் கூடிய, தன்னாட்சி பெற்ற மையமாக செயல்படும் வகையில் ரூ.120 கோடி நிதி வழங்கப்படும்.