வேலூர்: “காலனித்துவ ஆதிக்க இந்திய கல்வி முறையை மாற்றுவதற்காக புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படுகிறது” என்று தென் மண்டல பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மேலும், “துரதிருஷ்டவசமாக நாம் பாரம்பரியத்தை இழந்துவிட்டோம். மீண்டும் முந்தைய இந்திய கல்வி முறைக்கு திரும்ப முயற்சி செய்கிறோம்” என்றார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அகில இந்திய பல்கலைக்கழக சங்கத்தின் தென் மண்டல துணைவேந்தர்கள் கருத்தரங்கம் இன்று (டிச.10) தொடங்கியது. இரண்டு நாள் கருத்தரங்கின் தொடக்க விழா நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசும்போது, ‘‘புதிய கல்விக் கொள்கை மாற்றத்துக்காக கொண்டுவரப்படுகிறது. மனப்பாடம் செய்தல், கற்றல், தேர்வு முறை போன்றவற்றில் இருந்து மாறுபடுகிறது. கற்றல், கற்பித்தல் நமது பாரம்பரியத்தில் இருந்து தேவை அதிகமாக உள்ளது.