முத்துப்பேட்டை, நவ.18: முத்துப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதே போன்று, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் தமிழகத்தில் நவ.,21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டது.
அதன்படி முத்துப்பேட்டை பகுதியில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் மக்களின் அன்றாட பணிகள் பணிகள் அதேபோல் இப்பகுதியில் விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால் விவசாய பணிகளும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு மணிக்கு பிறகு பெய்ய துவங்கிய மழை விடியவிடிய நேற்று காலை வரை மிதமான மழை பெய்தது பின்னர் மதியம் மணிக்கு பிறகு தூறலுடன் துவங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்ய துவங்கி மாலை வரை இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது வானமும் இரண்டு பொழுது சாய்ந்தது போன்று காணப்பட்டது தொடர்ந்து இரவு வரை தூறல் பின்னர் கனமழை என மாறி மாறி பெய்தது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டது.
The post முத்துப்பேட்டை பகுதியில் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது appeared first on Dinakaran.