முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர்

1 month ago 11

முத்துப்பேட்டை, அக்.2: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பெரியநாயகி மகளிர் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் வித்யா தலைமைவகித்தார். ரோட்டரி சங்க தலைவர் சாகுல் ஹமீது துவக்கிவைத்தர
நாட்டு நலப்பணித்திட்டமுகாம் 3 வது நாளான நேற்று இயற்கை வளம் பெருக மரக்கன்றுகள் நட்டனர்.

மேலும் மரக்கன்றுகளை பாதுகாக்க இரும்பு கூண்டுகள் வழங்கப்பட்டது. மாணவிகள் பள்ளி வளாகம் உட்பட பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டனர். அதனை தொடர்ந்து உழவாரப்பணியில் மாணவிகள் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்ட தலைவர் கோவி.ரெங்கசாமி, செயலாளர் பத்மநாபன், தலைவர் தேர்வு பாலசந்தர் மரக்கன்று சேர்மன் இளையராஜா, நிர்வாகிகள் அந்தோணி ராஜா, ஆசிரியர் செல்வசிதம்பரம் மற்றும் ஆசிரியைகள் மாணவ மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

The post முத்துப்பேட்டை கோவிலூர் பெண்கள் பள்ளியில் மாணவிகள் மரக்கன்றுகள் நட்டனர் appeared first on Dinakaran.

Read Entire Article