முத்துப்பேட்டை அருகே மழையால் சேதமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

2 hours ago 3

முத்துப்பேட்டை : முத்துப்பேட்டை அருகே மழையால் சேதமான இந்த சாலையை சீரமைத்து ஆற்று கரையோரம் தடுப்பு சுவர்அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடை வடகாடு பாலத்திலிருந்து கந்தப்பரிசான் ஆற்று ஓரமாக செல்லும் சாலையானது ஜாம்புவானோடை – அரமங்காடு – செங்காங்காடு – தில்லைவிளாகம் ஆகிய பகுதிகளை இணைப்பு சாலை 5கிலோமீட்டர்தூரம் உள்ளது.

இந்த சாலையை சுற்றுபகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தினந்தோறும் சுற்றுபகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இவ்வழியாக சென்று வருகின்றனர்.

இந்த சாலை சில வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. அப்போது சில பகுதியில் மட்டும் ஆற்று பகுதியில் தடுப்பு சுவர்கட்டப்பட்டது பல இடங்களில் தடுப்பு சுவர்கட்ட வில்லை இதனால் சாலையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த மாதம் பெய்த கனமழையால் கந்தப்பரிசான் ஆறு செல்லும் பகுதியில் சேதமாகியுள்ளன. பல இடங்களில் சாலையின் நடு பகுதி வரை குடைந்து சேதமாகி ஆற்றில் அடித்து சென்று விட்டது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்லும்போது சாலை சரிந்து ஆற்றுக்குள் விழுந்து பெரியளவில் விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் மழை பெய்யும் நேரத்திலும் இரவு நேரத்திலும் இந்த சாலையில் செல்லும் ஒவ்வொருவரும் தடுமாறி விழுந்து பாதிக்க வாய்ப்புகள் உள்ளது. வாகனங்கள் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட வாய்ப்புகள் உள்ளது அதனால் சேதமான இந்த சாலையை சீரமைத்து ஆற்று கரையோரம் தடுப்பு சுவர்அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post முத்துப்பேட்டை அருகே மழையால் சேதமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article