முத்துப்பேட்டை, பிப்.10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த அடஞ்சவிளாகம் கிராமத்தில் ஒன்றியம் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது. இதில் நூறு நாள் வேலையை முடக்க நினைக்கும் அரசை கண்டித்து வரும் 12ந்தேதி முத்துப்பேட்டையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தும், எதிர்கால கடமைகள் குறித்தும் ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் பேசினார். ஒன்றிய தலைவர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் தனிக்கொடி, ஒன்றிய துணைத் தலைவர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இதில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தலைவராக சீதாலெட்சுமி, செயலாளராக யசோதா, பொருளாளராக தனலெட்சுமி, துணைத் தலைவராக நித்தியா, துணைச் செயலாளராக ராதிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
The post முத்துப்பேட்டை அருகே நூறு நாள் தொழிலாளர் சங்கம் அமைப்பு appeared first on Dinakaran.