முத்துப்பேட்டை, ஜன. 25: முத்துப்பேட்டை அருகே கோமாரி தடுப்பபூசி முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மாங்குடி, மருதவனம் பகுதிகளில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஹமீது அலி, மன்னார்குடி கோட்ட உதவி இயக்குனர் டாக்டர் ஆறுமுகம், நோய் புலனாய்வுபிரிவு உதவி இயக்குனர் டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தேசிய நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் ஆறாவது சுற்று கோமாரி தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமில் டாக்டர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவில் டாக்டர்கள் செல்வகுமார். பிரேம், திவ்யா, மகேந்திரன், காயத்ரி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் ஜெகநாதன், நிர்மலா கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சத்தியசீலன், மாதவன், வீரமணி, தமிழ்ச்செல்வி, மகாலட்சுமி, பிரசன்னா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினரால் 1500 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.
இந்தநிலையில் முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர், வடக்கு செறுபனையூர், கிராமங்களில் கோமாரி நோய்க்கு எதிரான தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமை அப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ளாமென கால்நடை தலைமை மருத்துவர் டாக்டர் மகேந்திரன் கூறினார்.
The post முத்துப்பேட்டை அருகே கோமாரி தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.