முத்துப்பேட்டை, மே 8: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் கடைத்தெருவில் ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காக்கும் விதமாக. பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
முன்னதாக ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வினோத்குமார் முன்னிலை வகித்தார். திமுக ஒன்றிய செயலாளர் மனோகரன் நீர்மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் குளிர்பானம் வழங்கி துவக்கி வைத்து பேசினார். இதில் ஒன்றிய துணைச்செயலாளர் முத்துலெட்சுமி சிவா, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் குன்னலூர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் விஜயன், துணை அமைப்பாளர்கள் பாலாஜி, சபரிநாதன், சிவமகேந்திரன், தமிழன்பன், மாதவன் மற்றும் கிளைகழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், திமுகவினர் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.
The post முத்துப்பேட்டை அருகே இடும்பாவனத்தில் திமுக இளைஞரணி சார்பில் நீர்மோர் பந்தல் appeared first on Dinakaran.