மராமத்துப் பணி செய்ய வல்லக்கடவு சாலையை கேரள அரசு ஏன் சீரமைக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வல்லக்கடவு சாலையை கேரள அரசு செப்பனிட்டால் அதற்கான செலவை ஏற்கத் தயார் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்லக்கடவு சாலையை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு 4 வாரத்தில் கேரள அரசு செப்பனிட வேண்டும். சாலை செப்பனிடும் பணியின் போது தமிழ்நாடு அரசின் அதிகாரி உடன் இருக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
The post மராமத்துப் பணி செய்ய வல்லக்கடவு சாலையை கேரள அரசு ஏன் சீரமைக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் கேள்வி! appeared first on Dinakaran.