முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் சரஸ்வதி பூஜை

3 months ago 19

 

முத்துப்பேட்டை, அக்.11: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் மகாதேவன் தலைமையில் சரஸ்வதி பூஜை விழா நடைபெற்றது. விழாவில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சங்கீதா, சத்துணவு அமைப்பாளர் சுதா மற்றும் பணியாளர்கள் காலை உணவு திட்ட பணியாளர்கள், ஆசிரியர் கார்த்திக், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அபிநயா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு அவல், பொரி, கடலை, சுண்டல் மற்றும் பள்ளி தோட்டத்தில் நட்டு பராமரித்த வாழை மரத்தில் விளைந்த வாழைப்பழம் வழங்கப்பட்டன.

The post முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் சரஸ்வதி பூஜை appeared first on Dinakaran.

Read Entire Article